சிகப்பரிசி கார பணியாரம்
சமையல் குறிப்புகள்
- 1
பணியாரம் செய்வதற்கு, முதலில் சிகப்பரிசி,இட்லி அரிசி,உளுந்து, ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு,கழுவி தண்ணீர் ஊற்றி,3 மணி நேரம் ஊற வைக்கவும்,.... ஊறிய அரிசியை,மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் சேர்த்து,கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்,....தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்,....
- 2
கடாயில் 1டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, உளுந்து, கடலைப்பருப்பு,கடுகு போட்டு சிவந்ததும்,பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய், கருவேப்பிலை,இஞ்சி, சேர்த்து நன்றாக வதக்கி, மாவுடன் சேர்த்துக் கலக்கவும்,.....
- 3
அதனுடன் தேங்காய் துருவல், அல்லது பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள்,சேர்த்து கலக்கி விடவும்,... கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும், பணியாரத்தை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து,ஒவ்வொன்றாக ஊற்றவும்,மாவு ஊற்றி சிறிது நேரத்தில் மேலே எழும்பி வரும்,....(அடுப்பை மிதமான தீயை விட அதிகமாக வைத்து ஊற்றவும்)
- 4
இரண்டு பக்கமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும்,..... சுவையான சிகப்பரிசி பணியாரம் தயார்,.....
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்