ஆயில் இல்லா வல்லாரை ஆமை அடை 🦋🦋🦋

#AsahiKaseiindia
#AsahiKaseiIndia
#No_oil
வல்லாரைக் கீரை அடை குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. அடிக்கடி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதைப்போல் செய்து கொடுக்கலாம். காலை உணவு மாலை நேர உணவுகளுக்கு ஏற்றது.
ஆயில் இல்லா வல்லாரை ஆமை அடை 🦋🦋🦋
#AsahiKaseiindia
#AsahiKaseiIndia
#No_oil
வல்லாரைக் கீரை அடை குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. அடிக்கடி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதைப்போல் செய்து கொடுக்கலாம். காலை உணவு மாலை நேர உணவுகளுக்கு ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும்.
- 2
அரிசி பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 3
சோம்பு பூண்டு மிளகாய் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 4
கீரையை நன்றாக அலசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 5
அரிசி உளுந்து ஊறியபின் கிரைண்டரில் நன்றாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 6
இட்லி மாவை விட கொரகொரப்பாக இருக்க வேண்டும்.
- 7
இதனுடன் மிளகாய் சேர்க்க வேண்டும்.
- 8
மாவோடு பூண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 9
சோம்பை மாவோடு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 10
மாவு அரைத்தவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 11
வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 12
கொத்தமல்லி கருவேப்பிலை அறிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 13
கீரையை மிக்ஸி கப்பில் போட்டு தூள் தூளாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 14
அரைத்த மாவுடன் கீரையை சேர்த்து கலக்க வேண்டும்.
- 15
பின்பு அறிந்து வைத்த வெங்காயத்தை சேர்த்து கலக்க வேண்டும்.
- 16
பின்பு கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து கலக்க வேண்டும்.
- 17
பின்பு தேங்காய் துருவலை சேர்த்து கலக்க வேண்டும்.
- 18
இதனுடன் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
- 19
மாவு முன்பைவிட கெட்டியாக இருக்கும்.
- 20
தோசைக்கல்லை நன்றாக காய வைக்க வேண்டும்.
- 21
தோசைக்கல்லில் கலந்த மாவை எடுத்து சிறிது சிறிதாக வைக்க வேண்டும்.
- 22
சிறிய அடை போல் தட்டவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
- 23
இரண்டு பக்கமும் சிவந்த பின் அடை வெந்தவுடன் எடுத்து கொள்ளவும். இப்போது நமது சுவையான வல்லாரைக் கீரை அடை ரெடி ஆகிவிட்டது.
Keywords
Similar Recipes
More Recipes



































































கமெண்ட் (3)