🍨வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச்🍨
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.
🍨வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச்🍨
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பில் 1/2 லிட்டர் பாலை கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி கொள்ளவும். ரெண்டு ஸ்பூன் சோள மாவு எடுத்து கொண்டு காய்ச்சி வைத்திருக்கும் பாலை சிறிது ஊற்றி கெட்டியாக கரைத்து வைக்கவும். பாலுடன் அரை கப் சீனி சேர்க்கவும்.
- 2
கரைத்த சோள மாவை அந்தப் பாலுடன் சேர்த்து கிண்டவும். சீனியும் சேர்த்து கிண்டி கெட்டி பதத்திற்கு வரும் போது அடுப்பை அணைக்கவும். அதோடு ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்து பின் ஐஸ்கிரீம் பவுடர் சேர்த்து கலக்கவும்.
- 3
கலக்கி வைத்து ஐஸ்கிரீமை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு நிமிடம் ஓட விடவும். அதை ஒரு காற்றுப் புகாத பவுலில் ஊற்றி மூடி ஃபிரிட்ஜில் வைக்கவும்.
- 4
அதே போல நாலு முறை, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மிக்ஸி ஜாரில் அடித்து ஃப்ரீஸரில் வைக்கவும். 8 மணி நேரம் கழித்து வெண்ணிலா ஐஸ் கிரீம் ரெடி.
- 5
பட்டர் ஸ்காட்ச் ரெடி செய்ய அடுப்பில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து பொடியாக உடைத்த முந்திரியை அதில் வறுத்து எடுக்கவும்.
- 6
வறுத்த முந்திரியில் ஒரு ஸ்பூன் சீனி சேர்த்து கிண்டவும்.
- 7
அதை ஒரு தட்டில் பரப்பி விடவும் 15 நிமிடம் கழித்து அது கண்ணாடி போல் எடுக்க வரும் அதை தூளாக உடைக்கவும்.
- 8
அந்த பட்டர் ஸ்காட்ச் கடைசி நான்காவது முறை அடித்தவுடன் இதை அதில் சேர்த்து மூடி ஃப்ரீஸ் வைக்கவும்.
- 9
ஐஸ்கிரீம் பாக்சை திறந்து ஒரு கரண்டியை தண்ணீரில் கழுவி ஐஸ்கிரீமை ஒரு பவுலில் பரிமாறவும். சுவையான வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச் ரெடி.🍧🍧🍧
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes


























கமெண்ட்