Soya Chukka/சோயா சுக்கா

Soya Chukka/சோயா சுக்கா
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் சோயாவை எடுத்துவைத்து கழுவி தண்ணீரில் வேக வைத்து இரண்டு முதல் மூன்று முறை தண்ணீரை மாற்றி, நன்கு பிழிந்து எடுத்து வைக்கவும்.
- 2
ஆயிலில் வறுத்து பொடி செய்வதற்காக,கடாயில் 1 டேபிள்ஸ்பூன்ஆயில் விட்டு, 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், 2 டேபிள்ஸ்பூன் தனியா,7 வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை,சேர்த்து நன்கு வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து விடவும்.
- 3
அதை நன்கு பொடியாக அரைத்து வைக்கவும். தாளிப்பதற்கு, 2 கிராம்பு 1துண்டு பட்டை, 1 டீஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை 1பச்சை மிளகாய் கீறியது, 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, எடுத்து வைக்கவும். 1 பெரிய வெங்காயம்,1 தக்காளி நன்கு பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 4
4 டேபிள் ஸ்பூன் ஆயில் விட்டு, சோம்பு, கிராம்பு பட்டை, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 5
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு, அரைத்த பொடி சேர்த்து,1கப் தண்ணீர் விட்டு பச்சை வாசனை நீங்க வேகவிடவும்.
- 6
1 டீஸ்பூன் கரம் மசாலா சேர்க்கவும். நன்கு கலக்கிவிட்டு பிழிந்து எடுத்து வைத்த சோயாவை சேர்த்து மூடி, நன்கு வேகவிடவும்.
- 7
தண்ணீர் வற்றி சுருண்டு வரும் பொழுது, அடுப்பிலிருந்து இறக்கி ஒரு கிண்ணத்தில் மாற்றி எடுத்து வைக்கவும். சுவையான Soya Chukka ரெடி.😋😋
- 8
சப்பாத்தி, சாதத்திற்கு ஏற்றது. 😋
Keywords
Similar Recipes
More Recipes

























கமெண்ட் (4)