சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நுரையீரலை சுத்தமாக கழுவிக் கொள்ளவும் பின் சின்ன வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்
- 2
பின் நுரையீரலை குக்கரீல் போட்டு அதில் தேவைக்கேற்ப உப்பு, 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள் மற்றும் அளவாக தண்ணீரகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 3
பின் குக்கரை மூடிக் கொண்டு 5 விசில் வரும்வரை பொறுத்திருக்கவும் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும் தண்ணீரை சுக்காவில் சேர்த்துக் கொள்ளலாம்
- 4
பிறகு மறுப்புறம் மசாலாத் தயார்ச் செய்யலாம் ஒருக்கடாயில் 1 ஸ்பூன் சோம்பு, மிளகு, 2 ஸ்பூன் சீரகம், குண்டு மல்லி மற்றும் 2 பட்டை, 4 கிராம்பு 5 வரமிளகாய் (வத்தல்) ச் சேர்த்துக் கொண்டு வறுத்துக் கொள்ளவும் பின் தண்ணீர் ஊற்றி paste பதத்திற்கு அரைத்துண் கொள்ளவும்
- 5
பின் கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, 25 பல் சின்ன வெங்காயம், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும் பின் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்
- 6
பிறகு நுரையீரலைச் சேர்த்துக் கொண்டு நன்றாக கிளரியப்பின் அவித்த தண்ணீரைச் சேர்க்கவும் பின் தண்ணீர் வற்றும் வரை பொறுத்திருக்கவும்
- 7
நுரையீரல் முதலில் வேக வைக்கும் போதே உப்புச் சேர்க்கப்பட்டது என்பதால் அளவாகச் சேர்த்துக் கொள்ளவும் தண்ணீர் வற்றியதும் கைப்பிடி அளவு மல்லி இலைகளைச் சேர்க்கவும்
- 8
பின் இறக்கி பரிமாறவும் சுவையான காரசாரமான ஆட்டின் நுரையீரல் சுக்கா வறுவல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes


























கமெண்ட்