பலாகொட்டை வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
பலாக்கொட்டையை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதைஇரண்டாக கட் பண்ணி குக்கரில் வேக வைக்கவும் 5 6 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
வெங்காயத்தை நைசாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும் கறிவேப்பிலையை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 4
வரமிளகாய் தேங்காய் வருவல் சோம்பு பட்டை இதை மிக்ஸியில் பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும் அதனுடன் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்
- 6
பொன்னிறமாக வந்தவுடன் வேகவைத்த பலாக்கொட்டை யை சேர்க்கவும் அதனுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து உப்பு சேர்த்து மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்
- 7
அதனுடன் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்l மீண்டும் காரத்திற்காக கால் டீஸ்பூன் தனி வரமிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 8
அதை நன்றாக கிளறி கெட்டியாக வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்
- 9
இப்பொழுது பலாக்கொட்டை வறுவல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட்