நிலக்கடலை குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் மசாலா தயார்ச் செய்யலாம் 2 தேங்காய்சில், 1/2ஸ்பூன் மிளகு, சீரகம்,சோம்பு, 2 பட்டை, ஏலக்காய், கிராம்புச் சேர்த்து மிக்ஸி ஜாரில் தண்ணீர்ச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பின் 150 கி நிலக்கடலையை ஒரு முறை கருகாமல் வறுத்து தோலை நீக்கி விடவும் பின் குக்கரீல் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து உப்பு அளவாகச் சேர்த்து 5 விசில் வரை வைக்கவும்
- 4
பின் இறக்கி பார்த்தால் நிலக்கடலை வெந்து பெரிதாக இருக்கும்
- 5
பிறகு ஒருக் கடாயில் எண்ணெய் ஊற்றி 1/2 ஸ்பூன் கடுகு, சோம்பு, 2 பெரிய வெங்காயத்தை மிக சிறிதாக நறுக்கிச் சேர்த்துக் கொண்டு வதக்கவும்
- 6
பின் கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை மற்றும் உப்புச் சேர்த்து வதக்கி விடவும் வதங்கியதும் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும்
- 7
பின்பு 1 தக்காளி சிறிதாக நறுக்கியதைச் சேர்த்துக் கொள்ளவும்
- 8
பிறகு அனைத்தும் நன்றாக வதங்கியதும் 1/2 pinch மஞ்சள்த்தூள்,2 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள்ச் சேர்த்து வதக்கியதும் சிறிதளவு தண்ணீரச் சேர்த்து ஒருக் கொதி வந்ததும்
- 9
அரைத்து வைத்திருந்த தேங்காய் மசாலாக் கலவலயைச் சேர்த்துக் கொள்ளவும் அதுவும் ஒருக் கொதி வந்ததும் அவித்து வைத்த நிலக்கடலையை அதை வேக வைத்த தண்ணீருடன்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 10
பின் தேவைப்பட்டால் உப்புச் சேர்த்து கொதிக்க விடவும்
- 11
நமக்கு தேவையான நிலக்கடலைக் குழம்பு தயார் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes






























கமெண்ட் (2)
If you like my recipes please like and comment and follow me😊😊