நிலக்கடலை குழம்பு
#vattaram#week13
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் இவைகளைஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 3
நிலக்கடலையை ஒரு சிறிய வாணலியில் வறுத்து தோல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது தோல் எடுத்த நிலக்கடலையை ஒரு சிறிய குக்கரில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 5
ஒரு மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை,பெருங்காயம் தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
தக்காளி நன்கு வெந்தவுடன் சாம்பார் பொடியும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
இப்பொழுது வேகவைத்த நிலக்கடலையை போட்டு கலக்கி பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
- 8
நன்கு கொதித்து பொங்கி வரும் பொழுது கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான நிலக்கடலை குழம்பு தயார். இதை சாதத்துடனும்அல்லது சப்பாத்தி தோசையுடன் தொட்டு சாப்பிடலாம்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

























கமெண்ட் (6)