ஆலூ ப்ரெட் பக்கோரா (உருளை ப்ரெட் பக்கோடா)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும். பின்னர் மசித்த கிழங்குடன் பொடியாக நறுக்கி அல்லது அரைத்த இஞ்சி பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 2
மேலும் சீரகத்தூள், தனியா தூள், ஓமம், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, சீஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலா கிழங்கில் நன்றாக கலக்குமாறு பிசைந்து கொள்ளவும்.
- 3
பின்னர் சான்வெஜ் ப்ரெட்டை எடுத்து அதன் மேல் ஜேஸ்வான் ஜாசை தடவி அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பவும். பின்னர் மற்றொரு ப்ரெட்டை எடுத்து அதன் மேல் டொமட்டோ கெட்சப்பை தடவி உருளை மசாலா மேல் வைத்து மூடி லேசாக அழுத்தவும்.
- 4
பின்னர் முக்கோண வடிவில் ப்ரெட்டை வெட்டிக் கொள்ளவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலை ஆகியவற்றில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
- 5
பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து அதில் வெட்டி வைத்துள்ள ப்ரெட் துண்டுகளை நனைத்து சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.
- 6
கிரிஸ்பியாக பொரித்த பக்கோராவை டொமட்டோ ஜாஸ் மற்றும் கிரீன் சட்னி உடன். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தியான ஸ்னாக்ஸ் தயார். இதை இன்னும் ஹெல்த்தி ஆக்க கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை வேக வைத்து உருளையுடன் சேர்க்கலாம்.
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட்