சர்க்கரைவள்ளிக் கிழங்கு ப்ரெட் டோஸ்ட் / sakravalli kilangu bread toast recipe in tamil

சர்க்கரைவள்ளிக் கிழங்கு ப்ரெட் டோஸ்ட் / sakravalli kilangu bread toast recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து உருகியதும் நறுக்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து கிளறவும். பின் அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து 4நிமிடம் கிழங்கு நன்றாக சாப்டாகும் வரை கிளறி இறக்கவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் 2முட்டையை உடைத்து ஊற்றவும் அதனுடன் பால் மற்றும் பட்டைத்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும். பின்னர் ப்ரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை நீக்கி விட்டு லேசான அழுத்தம் கொடுத்து சற்று மெலிதாய் தேய்த்து அதன் நடுவே சர்க்கரை வள்ளிக்கிழங்கு வைத்து அதை ஒரு ரோலாக உருட்டவும். கடைசி பகுதியில் முட்டையை தடவி மூடவும்.
- 4
பின்னர் ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து உருகியதும் ப்ரெட் ரோலை முட்டைக் கலவையில் நனைத்து வாணலியில் வைத்து ப்ரெட்டின் அனைத்து பகுதியும் ரோஸ்ட் செய்யவும்.
- 5
சுவையான ஆரோக்கியமான சக்கரை வள்ளிக்கிழங்கு ரோஸ்ட் தயார். தயார் செய்த ரோஸ்ட் மீது சர்க்கரை பவுடரை தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்