எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு /Ennai kathirikai kuzhambu Recipe in tamil

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு /Ennai kathirikai kuzhambu Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மசாலா அரைப்பதற்கு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும் பிறகு 5 பல் பூண்டு
- 2
ஒரு துண்டு இஞ்சி 2 தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 3
ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
மசாலா வதங்கிய பிறகு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கால் கப் தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு
- 5
ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும் பிறகு கத்தரிக்காய் வதக்கு வதற்கு ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து
- 6
படத்தில் காட்டியவாறு கத்தரிக்காயை நறுக்கி எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கவும் ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக கத்தரிக்காயை வதக்கி மற்றொரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்
- 7
பிறகு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து வெந்தயம் சோம்பு சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்து வைத்த மசாலா சேர்த்து
- 8
இரண்டு நிமிடங்கள் வதக்கி பின்பு கால் கப் புளிக்கரைசல் சேர்த்து குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
- 9
தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும் பிறகு வதக்கி வைத்த கத்தரிக்காயை சேர்த்து
- 10
நன்றாக கிளறி மூடி வைத்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாகக் கொதிக்கவைக்கவும்
- 11
பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்
- 12
சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
- வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
- நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
- சுண்டைக்காய் காரக் குழம்பு / Sundakai puli kulambu Recipe in tamil
- கிராமத்து சங்கரா மீன் குழம்பு / Sankara Meen Kulambu curry Recipe in tamil





































கமெண்ட்