வெண்டைக்காய் புளிக்குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
வெண்டைக்காயை கழுவி பெரிதாக நறுக்கி சிறிது நேரம் வெயிலில் வைக்கவும்
- 3
பின் ஒருக்கடாயில் வெண்டைக் காய்களைப் போட்டு வெறும் வருப்பாக வறுக்கவும் பின் படத்தில் காட்டியவாறு சிறிது கருப்பு வரவும் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
அதேக் கடாயில் 200ml எண்ணெய் ஊற்றி 1ஸ்பூன் வெந்தயம் சிறிதளவு பெருங்காயத்தூள்ச் சேர்த்து வதக்கவும் மனம் நன்றாக வரும்
- 5
பின் கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை 5 பல் பூண்டு 1 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 6
பின் 15 நறுக்கிய சின்ன வெங்காய் தேவைக்கேற்ப உப்பு மற்றும் 2 நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்
- 7
நன்றாக வதங்கியதும் வறுத்து வைத்த வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும் வெயில் மற்றும் வறுப்புச் செய்ததால் பிசுபிசுப்பு தன்னை இருக்காது
- 8
பின் 1்ஸ்பூன் மஞ்சள்த்தூள் மற்றும் 2 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள்ச் சேர்த்து வதக்கியப்பின் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்க்கவும் ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும்
- 9
காய்கள் நன்றாக வெந்ததும் புளிக்கரைசலைச் சேர்க்கவும் பின் கொதிக்க விடவும்
- 10
சிறிதளவு மல்லி இலைத்தூவிப் இறக்கிபரிமாறவும் சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes































கமெண்ட் (2)