வெஜ் பாஸ்தா
அனைவரும் விரும்பி உண்ணும் பாஸ்தா ரெசிபி உங்களுக்காக
சமையல் குறிப்புகள்
- 1
நன்கு கொதிக்கும் நீரில் பாஸ்தாவை போட்டு பத்து நிமிடம் வேகவிடவும். வெந்தபின் பாஸ்தாவை குளிர்ந்த நீரில் அலசி வடித்து வைத்துக் கொள்ளவும்
- 2
கேரட், குடைமிளகாய், வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2 பச்சை மிளகாய் கீறி வைத்துக் கொள்ளவும். தக்காளியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கிய பின் கேரட் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சாறு சேர்த்து நன்கு வேகவிடவும்
- 4
தக்காளி சாறு 2 நிமிடம் வதங்கியவுடன் கரம் மசாலா, மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் அதனுடன் வடித்து வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து, கொத்தமல்லி இலை தூவி நன்கு கிளறவும்.
- 6
அனைவருக்கும் பிடித்தமான பாஸ்தா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்