கருப்பு உளுந்தங்களி

#ilovecooking இது பெண்களுக்கு இடுப்பு வலி வராமல் இருக்க சத்து மிகுந்த காலை உணவு
கருப்பு உளுந்தங்களி
#ilovecooking இது பெண்களுக்கு இடுப்பு வலி வராமல் இருக்க சத்து மிகுந்த காலை உணவு
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை கழுவி காய வைத்து எடுத்துக் கொள்ளவும் தோல் உளுந்தை பொன்னிரமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதனை மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு அரைத்து வைத்த அந்த மாவிலிருந்து தேவையான அளவு மாவை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும் பிறகு அதே பவுலில் இரண்டரை மடங்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்
- 4
அந்த தண்ணீரை ஒரு கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அடுப்பில் வைக்க வேண்டும் மிதமான சூடு வந்தவுடன் மாவை சிறிது சிறிதாக தண்ணீரில் கலந்து கொள்ளவும்
- 5
அதனுடன் மாவை கைவிடாமல் கலக்கிக் கொள்ளவும் அதை நன்றாக கொதித்து வேகவிடவும்
- 6
பத்து நிமிடத்தில் அது கெட்டியான பதத்தில் வந்துவிடும் அதனை தண்ணீரில் கையை நனைத்துவிட்டு மாவின் மீது வைத்து தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாமல் இருக்கும் இறக்கிக் கொள்ளவும்
- 7
அதை ஒரு தட்டில் வைத்து கையை வைத்து நடுவில் ஒரு கு லியாக செய்துகொள்ளவும் அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு வெல்லத்தை வைக்கவும்
- 8
இப்போது சூடான சுவையான சத்து மிகுந்த கருப்பு உளுந்தங்களி தயார்
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட்