பீட்ரூட் பொரியல்
#veg சுவையான ஆரோக்கியமான சமையல்.
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட் தோல் சீவி சுத்தம் செய்து கட் செய்து எடுத்து வைத்து கொள்ளவும். வெங்காயம் கட் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து எடுக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, தாளித்து அதனுடன் வெங்காயம் போட்டு காய்ந்த மிளகாய் வற்றல் கிள்ளி போட்டு நன்றாக வதக்கவும்.
- 3
பீட்ரூட் சேர்த்து அதில் கடலைப்பருப்பு சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும்.
- 4
வெந்த பீட்ரூட் உடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் பொரியல் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15382245
















கமெண்ட்