கடாய் மஸ்ரூம் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை சோம்பு பிரியாணி இலை கல்பாசி பூ சேர்த்து தாளிக்கவும் பிறகு கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி வெங்காயம் வதங்கி கொண்டு இருக்கும் வேளையில் ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் துருவிய தேங்காய் சேர்த்து 5 பல் பூண்டு கால் டீஸ்பூன் சோம்பு சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 4
பிறகு வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 5
ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து மசாலாவை வதக்கவும்
- 6
மசாலாவில் பச்சை வாசனை போன பிறகு காளான் சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து
- 7
சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைத்து எண்ணெய் கொதி வந்த பிறகு அடுப்பை இறக்கவும்
- 8
சுவையான கடாய் மஷ்ரூம் கிரேவி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
























கமெண்ட்