காளான் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காளானை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவேண்டும் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளியை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை அண்ணாச்சி பூ கிராம்பு பட்டை போடவும் கறிவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயத்தை சேர்க்கவும்
- 3
வெங்காயம் பொன்னிறமாகவதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும் அதனுடன் தக்காளியை சேர்க்கவும்
- 4
பிறகு எடுத்து வைத்துள்ள புதினாவை சேர்க்கவும் அதனுடன் காளானை சேர்த்து கொள்ளவும்
- 5
காளான் சிறிதளவு வதங்கியவுடன் வரமிளகாய்த்தூள் பிரியாணி பவுடர் தயிர் இவற்றை சேர்க்கவும்
- 6
அனைத்தையும் நன்கு கிளறிய உடன் அரிசியை சேர்க்கவும் மீண்டும் ஒருமுறை கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
- 7
பிறகு குக்கரை மூடி விட்டு இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி கொள்ளவும் விசில் அடங்கியவுடன் திறந்து நெய்யை ஊற்றி ஓரமாக கரண்டியை வைத்து கிளறிக் கொள்ளவும்
- 8
இப்பொழுது சூடான சுவையான காளான் பிரியாணி தயார்
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட்