வெல்ல சீடை & உப்பு சீடை
சமையல் குறிப்புகள்
- 1
வெல்ல சீடை செய்வதற்கு முதலில் ஒரு பௌலில் ஒரு கப் பச்சரிசி மாவு தேங்காய் வெள்ளை எள்ளு வெண்ணை ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும், வெல்லப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு மெதுவாக பிசைந்து கொள்ளவும்
- 2
எல்லாம் வெள்ளை பாகையும் மொத்தமாகவும் ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்து கொள்ளவும்
- 3
பிசைந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், உருட்டி வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்க வேண்டும்,
- 4
உப்பு சீடை செய்வதற்கு முதலில் ஒரு பௌலில் சிகப்பு பச்சை அரிசி மாவை சேர்த்து பின் அதனுடன் உளுத்தம்பருப்பு மாவு, துருவிய தேங்காய், வெள்ளை எள்ளு, வெண்ணெய், உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 5
பின் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 6
பின் மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,
- 7
எண்ணெய் காய்ந்ததும், உருட்டி வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்க வேண்டும்,
- 8
சுவையான வெள்ள மற்றும் உப்பு சீடை தயார்
Keywords
Similar Recipes
More Recipes

























கமெண்ட் (3)