சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு மைதா மாவு உப்பு சிறிதளவு எண்ணெய் ஆகியவற்றை விட்டு மாவை நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 2
வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சோம்பு வெங்காயம் இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும் பின் கரம் மசாலா மிளகாய் தூள் ஆகியவற்றையும் சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்க வேண்டும்
- 4
வெங்காயத்தில் இருக்கும் தண்ணீர் வற்ற சிறிதளவு உடைத்த கடலையை பொடி பண்ணி அதில் போடவும்
- 5
கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 6
உருண்டைகளை தரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 7
பின் சப்பாத்தி மாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதன் மேல் மாவு தூவி பின் இன்னொரு சப்பாத்தி மாவை எடுத்து வைக்க வேண்டும் இதே மாதிரி திரும்ப திரும்ப 3 முறை பண்ண வேண்டும்
- 8
அதையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து நன்றாக தரட்ட வேண்டும்
- 9
தோசைக்கல் காயவைத்து அதில் இந்த தரடிய மாவை போட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுக்க வேண்டும்
- 10
பின் அதில் இருக்கும் சீட்டுகளை தனித்தனியாக ஒவ்வொன்றாக பிரித்து எடுக்கவும் அதை நீளவாக்கில் கட் பண்ணி எடுத்து வைத்துக் கொள்ளவும் சமோசா செய்வதற்கான சீட் ரெடி
- 11
இந்த சீட்டுகளை முக்கோண மாதிரி செய்யவேண்டும் பின் அதில் செய்து வைத்துள்ள கலவையை வைத்து சிறிதளவு மைதா மாவு தண்ணீர் விட்டு அதில் செய்து அதை ஓரங்களில் ஒட்டிவிட வேண்டும்
- 12
மிதமான எண்ணெய் சூட்டில் சமோசாவை போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 13
சுவையான சமோசா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes





























கமெண்ட்