கோலி கொழுக்கட்டை(goli kolukattai recipe in tamil)
Priya ArunKannan @CookingHomeWorld
கோலி கொழுக்கட்டை(goli kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவில் சிறிது உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
நன்கு கொதிக்கும் நீரை மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 3
பின்பு அதை சிறு சிறு உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.
- 4
இட்லி பாத்திரத்தில் உருண்டை பிடித்த அந்த மாவை ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, கடலைப் பருப்பு,உளுந்து பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 6
ஆவியில் வேக வைத்த அந்த உருண்டையை இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 7
சுவையான கோலி கொழுக்கட்டை ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15510297










கமெண்ட்