சுண்டைக்காய் கார குழம்பு(SUNDAKKAI KARA KULAMBU RECIPE IN TAMIL)
சுண்டைக்காய் கார குழம்பு(SUNDAKKAI KARA KULAMBU RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி சிறிது சிறிதாக பொடியாக நறுக்கி கொள்ளவும் பின் சுண்டைக்காயை காம்பு நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
இந்தக் காயை நன்றாக இடித்துக் கொள்ளவும் அதனை தண்ணீரில் போட்டு இரண்டு முறை அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்
- 3
வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கியதும் இடித்து எடுத்து வைத்துள்ள சுண்டைக்காயை எடுத்து அதில் போட்டு நன்றாக வதக்கவும் மூன்று ஸ்பூன் மிளகாய்த்தூள் போட்டு நன்றாக வதக்கிய பின் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்
- 4
குழம்பு நன்றாக கொதி வந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அதில் ஊற்றி மீண்டும் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்
- 5
நன்றாக கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும் மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டைக்காய் கார குழம்பு தாயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்