வாழைப்பூ கூட்டு(vaalaipoo koottu recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. வயிற்றை சுத்தப்படுத்தும் .
வாழைப்பூ கூட்டு(vaalaipoo koottu recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. வயிற்றை சுத்தப்படுத்தும் .
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு அரை மணி நேரம் ஊற விடவும்.
- 2
வானல் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அரிந்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 3
வாழைப்பூ வதங்கியவுடன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
- 4
5 நிமிடம் கொதித்த பின்னர் வாழைப்பூ நன்றாக வெந்து விடும். அதனுடன் வேக வைத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து கொதிக்க விடவும்
- 5
பின்னர் தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, கருவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து கொதித்துக் கொண்டிருக்கும் வாழைப்பூ கூட்டில் சேர்க்கவும். பின்னர் ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
- 6
ஆரோக்கியமான வாழைப்பூ கூட்டு தயார்
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்