லெமன் சாதம்(lemon rice recipe in tamil)

சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம்.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வடித்த சாதத்தை ஆற வைத்து,அதில் 1 முழு லெமன் சாறு,2ஸ்பூன் எண்ணெய் மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 2
பின் வாணலியில்,2ஸ்பூன் ஆயில் விட்டு, சூடானதும்,கடுகு,உளுந்து, கடலைப்பருப்பு,வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 3
பின்னர்,அதனுடன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்து கிளறவும்.கடைசியாக வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.உப்பு சரிபார்க்கவும்.
- 4
அவ்வளவுதான்.சுவையான லெமன் சாதம் ரெடி.
இதனுடன் உருளைக்கிழங்கு வறுவல்,வேக வைத்த முட்டை அல்லது பொரித்த முட்டை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்