முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)

#CF4
மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்...
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4
மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்...
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம்,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் சீரகத்தைப் பொரிய விடவும் பின்னர் வெங்காயம்,பச்சை மிளகாய்.சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
கருவேப்பிலை இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
- 4
சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 5
இப்பொழுது சிறிய தீயில் வைத்து முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்... இதனை ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
- 6
முட்டை பாதி வெந்த நிலையில் இருக்கும் பொழுது விதை நீக்கிய சிறிய தக்காளி துண்டுகளை சேர்க்கவும் (நான் செர்ரி தக்காளி சேர்த்துள்ளேன்) இதை நன்கு மிதமான தீயில் வைத்து வறுக்கவும்..
- 7
முட்டை பாத்திரத்தில் ஒட்டாத படி நன்கு வெந்த பிறகு மிளகு தூள் சேர்த்து வதக்கவும்...கலந்து வறுக்கவும்.
- 8
முட்டை நன்கு உதிரியாக வறுத்த பின்பு இறக்கி சூடாக பரிமாறவும்.....
Keywords
Similar Recipes
More Recipes
- மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
- கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
- வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
- வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
- தலைப்பு : தினை பாயசம்(thinai payasam recipe in tamil)























கமெண்ட்