கொள்ளு ரசம்(kollu rasam recipe in tamil)
குளிர்காலத்துக்கு ஏற்ற ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
கொள்ளு பருப்பை தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து தண்ணீர் வடித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
- 2
புளியைத் தண்ணீர் சேர்த்து கரைத்து இதில் தக்காளி கொஞ்சம் கறிவேப்பிலை மல்லி இலை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். மிளகு சீரகம் பூண்டு கொஞ்சம் கறிவேப்பிலை மல்லி இலை இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து தாளிப்பில் சேர்க்கவும். 30 வினாடி வதக்கவும்.
- 4
புளி கரைசலை இதில் ஊற்றவும். தண்ணீர் சூடு ஏறியதும் கொள்ளு பருப்பு தண்ணீரை இதில் சேர்க்கவும்.
- 5
ரசம் நுரைத்து வந்தபின் அடுப்பை அணைக்கவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15739288




கமெண்ட்