வரகு அரிசி சாம்பார் சாதம்(varagu arisi sambar sadam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வரகு அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்
- 2
அடுப்பில் குக்கரை வைத்து அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பின்பு அதில் கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும் என்றும் அதில் வெங்காயம் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடியை நன்கு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்
- 3
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு மசாலா சேரும் வரை வதக்க வேண்டும் காய் நன்கு வதங்கிய உடன் அதில் சிறிதளவு புளியை சேர்க்கவேண்டும் புளி வாசனை போனவுடன் நன்கு கொதிக்க வேண்டும் அதன்பிறகு அந்த வீசல் வரவும் அடுப்பை ஆஃப் செய்ய வேண்டும்
- 4
ஒரு கடாயில் நெய் ஊற்றி சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சாதத்துடன் கிளறிவிட வேண்டும் கொத்தமல்லி சேர்க்கவும் சுவையான சாம்பார் சாதம் ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட் (5)