சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)

#CF8
சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள்
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8
சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் காஷ்மீரி மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா உப்பு...
- 2
எலுமிச்சை சாறு, சிக்கன், ஒரு கப் தயிர் போன்றவற்றை......
- 3
கலந்து அரை மணி நேரம் தனியே ஊறவிடவும்
- 4
இதனை 90% எண்ணெயில் பொரித்தெடுக்கவும்....
- 5
அதே எண்ணெயில் பிரியாணி இலை,கல்பாசி பூ, ஏலக்காய்,பட்டை, கிராம்பு, போன்றவற்றை பொரித்தெடுக்கவும்.. பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கி, அதனுடன் பச்சைமிளகாய் சேர்க்கவும்...
- 6
இதற்கிடையில் பாதி அளவு உப்பு சேர்த்து அரிசியினை 70% வேக வைத்து முற்றிலும் தண்ணீரை,வடித்து வைக்கவும்
- 7
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்னர் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
- 8
கரம்மசாலா, மஞ்சள்தூள், நறுக்கிய புதினா மல்லி சேர்த்து நன்கு வதக்கவும்
- 9
இதனுடன் தயிர் சேர்த்து நன்கு வதக்கி பின்னர் உப்பு தேவையான அளவு சேர்க்கவும்...இதனுடன் பொரித்து வைத்துள்ள சில்லி சிக்கனை பாதி அளவு மட்டும் சேர்க்கவும்....
- 10
சிக்கன் சேர்த்ததும் நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி இறக்கவும்.
- 11
நான் சுவைக்காக தம் வைக்க மண் பாத்திரத்தை பயன்படுத்தியுள்ளேன்..
- 12
தம் வைக்கும் பாத்திரத்தில் ஒரு அடுக்கு சிக்கன் கலவையும் மற்றொரு அடுக்கு வடித்த அரிசியையும் சேர்க்கவும்.
- 13
இதன் மீது புதினா,மல்லி இலை, வறுத்த வெங்காயம் சேர்க்கவும்... பாலில் குங்குமப்பூ கலந்து அரிசியின் மீது வண்ணத்திற்காக ஊற்றவும்...
- 14
மைதா மாவினை சப்பாத்தி மாவு போல பிசைந்து, ஆவி வெளியில் போகாமல் சட்டியின் ஓரங்களில் ஒட்டவும்.
- 15
நன்கு மூடி கனமான சுடுநீர் பாத்திரம் வைக்கவும்.
இதனை மிகக் குறைந்த தீயில் 20 நிமிடம் தம்மில் விடவும்தேவைப்பட்டால் மீதமுள்ள சில்லி சிக்கனை மேலே அடுக்கி வைக்கலாம்.
- 16
தம் ஆறியவுடன் மாவினை அகற்றி விட்டு,சாதத்தினை கிளறி அல்லது கிளறாமல் பரிமாறலாம்.....
- 17
நான் பரிமாறும் முன்பு மீதமுள்ள சில்லி சிக்கனை பிரியாணியின் தம்மில் இருந்து இறக்கி அதன் மீது அடுக்கி பரிமாறி உள்ளேன்....
இதை நீங்கள் செய்து உங்கள் குடும்பத்தினரை, மகிழ்விக்க எனது வாழ்த்துக்கள்...
Keywords
Similar Recipes
More Recipes











































கமெண்ட் (5)