வெஜிடபிள் கட்லெட்(veg cutlet recipe in tamil)
#CF9 Christmas snacks
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நான்காக வெட்டி வாணலியில் வேக வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோலுரித்து நன்கு மசித்து அதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 2
கேரட் பீன்ஸ் வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வானொலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து வெங்காயம் கேரட் பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் உப்பு கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் துருவி வைத்துள்ள தண்ணீரை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் கொட்டி நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டி தட்டி கட்லட் வடிவத்திற்கு செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் கான்பிளவர் மாவு சேர்த்து அதனுடன் உப்பு கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
தட்டி வைத்துள்ள கட்லெட்டை எடுத்து காண்பவர் மாவில் முக்கி ரஸ்க் தூளில் நன்கு புரட்டி வைத்துக் கொள்ளவும். கட்லெட்டுகளை இதைப் போல் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
- 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தயார் நிலையில் உள்ள கட்லெட்டை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். சுவையான வெஜிடபிள் கட்லெட் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட் (2)