ட்ரை ப்ரூட்ஸ் குக்கீஸ்(dry fruits cookies recipe in tamil)

#welcome இந்தப் புத்தாண்டு மிகவும் வண்ணமயமாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து கலர்களையும் சேர்ந்தவர் செய்ய நினைத்தேன் அதனால் இந்த ட்ரை ப்ரூட்ஸ் குக்கீஸை முயற்சித்தேன் சுவையும் மணமும் நிறமும் நன்றாக இருந்தது

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய ட்ரை ஃப்ரூட்ஸ் அனைத்தையும் சேர்க்கவும் இத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
இது மற்றொரு பாத்திரத்தில் மிருதுவான வெண்ணெய் பொடித்த சர்க்கரையை சேர்த்து 3 நிமிடம் பீட் செய்யவும்
- 3
அத்துடன் முட்டை சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும் மற்றொரு பாத்திரத்தில் மைதா பேக்கிங் பவுடர் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
இப்போது வெண்ணெய் கலவையுடன் கலந்து வைத்துள்ள மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்... இத்துடன் ஊற வைத்துள்ள ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை கலக்கவும்
- 5
கலந்த கலவையை இரண்டாகப் பிரித்து பட்டர் ஷீட்டில் வைத்து சரி சமப்படுத்தவும்
- 6
இப்போது இவற்றை காற்று புகாதவாறு நன்றாக மூடி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும்
- 7
இரண்டு மணி நேரம் கழித்து இதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அவனை 180 டிகிரி பிரீ ஹிட் செய்து 20 நிமிடம் வைக்கவும்
- 8
கடாயில் செய்வதற்கு அடிகனமான பாத்திரத்தில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் சூடு செய்து பிறகு இதனை வைத்து 10 நிமிடம் வைக்கவும்
- 9
சுவையான ட்ரை ஃப்ரூட்ஸ் குக்கீஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (6)