பாவற்காய் வடைக் குழம்பு(pavakkai vadai kulambu recipe in tamil)

#pongal2022
பொங்களின் கடைசி நாளான கானும் பொங்கள் அன்று கறிநாள் என்று இருந்தாலும் அன்று ஆரோக்கியமான உணவு கொடுக்கபட்டது
பாவற்காய் வடைக் குழம்பு(pavakkai vadai kulambu recipe in tamil)
#pongal2022
பொங்களின் கடைசி நாளான கானும் பொங்கள் அன்று கறிநாள் என்று இருந்தாலும் அன்று ஆரோக்கியமான உணவு கொடுக்கபட்டது
சமையல் குறிப்புகள்
- 1
1/4 கி பாவற்காயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும் நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும் பின் 10 பல் சின்ன வெங்காயத்தை தட்டி எடுத்துக் கொள்ளவும் 1 பெரிய தக்காளியை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் 50 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் 1 ஸ்பூன் வெந்தயம் 1 pinch பெருங்காயத்தூளைச் சேர்க்கவும் பின் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 3
பின் 1 பச்சை மிளகாய் தட்டி வைத்த 10 சின்ன வெங்காயம் 3 பல் தட்டி எடுத்த பூண்டுச் சேர்க்கவும் (வெங்காயம், பூண்டு இரண்டையும் சிறிதாக நறுக்குவதற்கு தட்டி எடுத்தால் சுவை அதிகமாக இருக்கும்)
- 4
பின் 1 பெரிய தக்காளியை சேர்த்து வதக்கவும் அனைத்தும் நன்றாக வதங்க வேண்டும்
- 5
பின் நறுக்கி வைத்த 1/4 கி பாவற்காயைச் சேர்த்து இதனுடன் சுவைக்கேற்ப உப்பும் 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள் மற்றும் 3 ஸ்பூன் குழம்பு மசாலாவையும் சேர்க்கவும்
- 6
அனைத்தையும் கிளறியதும் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி பச்சை வாடைகள் போகும் வரை வேக வைக்கவும்
- 7
மூடிப் போட்டு நன்றாக வேக வைக்கவும்
- 8
பின் வெந்ததும் கரைத்து வைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும்
- 9
கொதிக்க ஆரம்பிக்கும் போது 2 பருப்பை வடைகளைச் சேர்த்துக் கொள்ளவும் பிறகு மல்லி இலையைத்தூவவும்
- 10
பின் இறக்கி பரிமாறவும் சுவையான பாவற்காய் வடை குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes




























கமெண்ட் (2)