ஸ்டப்ப் பன்னீர் சீஸ் கேப்ஸிகம்(stuffed paneer cheese capsicum recipe in tamil)
Chithu @chithuslove
ஸ்டப்ப் பன்னீர் சீஸ் கேப்ஸிகம்(stuffed paneer cheese capsicum recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை பொடியாக வெட்டி வாணலியில் எண்ணை ஊற்றி வதக்கவும்
- 2
பின்னர் பொடியாக வெட்டிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
- 4
பின்னர் கரம் மசாலா உப்பு சேர்த்து வதக்கி பன்னீர் ஐ பொடியாக வெட்டி சேர்க்கவும்
- 5
குடமிளகாய் ஐ மேல் காம்பு பகுதி வெட்டி உள்ளே விதையை நீக்கி விடவும்
- 6
பின்னர் கலவையில் ஒரு ஸ்பூன் போட்டு பின்னர் சீஸ் ஐ மேல துருவி போட்டு விடவும்
- 7
அடுத்த லேயர் கலவை போட்டு அதன் மேல் சீஸ் துருவி போட்டு ஒவ்வொரு குட மிளகாய் ரெடி செய்யவும்
- 8
ஒரு நான் ஸ்டிக் காடாயில் எண்ணை ஊற்றி குடை மிளகாய் ஐ வைத்து ஒரு 10 நிமிடம் சிம்மில் வைத்து மூடி வைக்கவும்
- 9
இப்போது ஸ்டப்ப் பன்னீர் சீஸ் கேப்ஸிகம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15919804



கமெண்ட்