ரவா ஜாமூன்(rava jamoon recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீருடன் 1 கப் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சவும். சர்க்கரை கரைந்ததும் சிறிதளவு ஏலக்காய்த்தூள் மற்றும் கேசரி கலர் சேர்த்து கொள்ளவும். ஒரு கடாயில் 1 கப் ரவையை வறுத்து கொள்ளவும். ரவை ஆறியதும் பவுடர் செய்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 1 கப் பால் ஊற்றி காய்ந்ததும் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள ரவையை சேர்த்து கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
மாவை நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பின் தேவையான வடிவங்கள் செய்து கொள்ளலாம்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நாம் விரும்பிய வடிவம் செய்து பொரித்து கொள்ளவும்.
- 5
பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் போட்டு 15 நிமிடங்கள் ஊறியதும் பாதாம் பிஸ்தா துருவல் தூவி பரிமாறவும். சுவையான ரவா ஜாமூன் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட் (2)