ராகி இட்லி(ragi idli recipe in tamil)

Afiya Parveen
Afiya Parveen @afiyaparveen

ராகி இட்லி(ragi idli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடம்
4 பேர்
  1. 2கப் ராகி
  2. 1கப் ப்ரொவன் அரிசி
  3. 1கப் ப்ரொவ்ன் அவல்
  4. 1கப் உளுந்து
  5. 1ஸ்பூன் வெந்தயம்
  6. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

50 நிமிடம்
  1. 1

    அரிசி, ராகி ஆகியவற்றை நன்றாக கழுவி ஒன்றாக ஊறவைக்கவும். அதே போல் உளுந்து, வெந்தயம் ஆகியவற்றையும் ஊறவக்கவும். அவலை தனியே ஊற வைக்கவும்.

  2. 2

    இவை அனைத்தையும் குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கிரைண்டரில் முதலில் உளுந்து, வெந்தயத்தை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ராகி, அரிசி, அவல் ஆகியவற்றை நன்றாக அரைத்து உளுந்து மாவுடன் நன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் தேவையான உப்பு சேர்த்து இட்லி சுடலாம்.

  3. 3

    உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்). உளுந்தை அரைக்கும் போது வெளியே எடுத்து ஊற வைத்த தண்ணீரையே உபயோகப்படுத்தி நன்றாக நுரைக்க அரைக்கவும். சிகப்பு அரிசிக்கு பதிலாக நார்மல் அரிசியும் பயன்படுத்தலாம். சிகப்பு அரிசியில் நார்சத்து உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Afiya Parveen
Afiya Parveen @afiyaparveen
அன்று

Similar Recipes