தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)

#made2
என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன்
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2
என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும் அதனுடன் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும் அவ்வப்போது திறந்து கிளறி விடவும்
- 2
தக்காளி பாதியாக சுண்டியதும் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு திரும்ப மூடி வைத்து வேக விடவும் நான் இந்த சீசனில கிடைக்கற நாட்டு மலைப்பூண்டு பயன்படுத்தி இருக்கிறேன் இது மிகவும் மணமாக இருக்கும் இந்த பூண்டை தோல் உரித்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 3
பின் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் உளுந்து சேர்த்து சிவக்க விடவும் பின் நறுக்கிய வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 4
பூண்டு சிவந்து மணம் வந்ததும் பெருங்காயத்தூள் மற்றும் வெந்தயப் பொடி சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து எடுக்கவும் பின் அதை தக்காளி கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 5
பின் பத்து நிமிடம் வரை மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிடவும் அவ்வப்போது திறந்து கிளறி விடவும் பின் தீயை முழுவதும் குறைத்து வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வேகவிடவும் பின் இறக்கி ஆறவிட்டு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்