ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)

Fayizah @fayizah
ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையும் கடலை மாவையும் மஞ்சள் தூளையும் உப்பையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கலந்து வைத்துள்ள ரவையை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
- 2
சிறிது நேரத்தில் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்து ஆறிய பிறகு அதனுடன் கொத்தமல்லி இலை மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு ரவை கலவையை சிறிது எடுத்து படத்தில் உள்ளவாறு நடுவில் பள்ளம் செய்து அதில் சீஸை வைத்து நன்றாக மூடி உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- 3
இப்போது சூடான சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரவா சீஸ் பால் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15985335



கமெண்ட்