பிரெஞ்ச் ஃப்ரைஸ் (French Fries recipe in tamil)

#pot
இது பிரான்ஸ் இல் பிறக்கவில்லை. பெல்ஜியம் இதன் பிறப்பிடம். 2005ல் பெல்ஜியம் போயிருந்தோம். எப்படி க்ரிஸ்ப் வருகிறது என்று கேட்டேன் பதில் “வெட்டி நீரில் கழுவிய துண்டுகளை துணி உலர்த்தும் ட்ரையர் ஒரு துணி பையில் கட்டி உலறவைப்போம் , ட்ரையர் செய்யும் மேஜிக்” என்று சொன்னார்கள். நான் அவ்வரி செய்ய வில்லை. காட்டன் டவல், பாபர் டவல் இரண்டிலும் ஒத்தி நீரை நீக்கினேன், 2 முறை பொறிக்கவேண்டும். நிறைய ஸ்டார்ச் சேர்ந்த உருளைகிழங்கை உபயோகப்படுத்தினால் ஃப்ரைஸ் ருசியாக இருக்கும்

சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்ததின் அருகில் வைக்க
- 2
நிறைய ஸ்டார்ச் சேர்ந்த உருளைகிழங்கை russet உருளை, பீல் தோலூரிக்க. ½ cm சென்டிமீட்டர் திக்கநேஸ் நீள நீள வெட்டுக. ஏற தாழ ஒரே அளவு இருந்தால் நல்லது. மெண்டோலின் ஒரே அளவாய் ஸ்லைஸ் செய்யும். ஓரு பெரிய போலில் குளிர்ந்த நீரில் போடுக. 15 நிமிடம் ஊறவைக்க. ஸ் டார்ச் போகும், வடித்து போலில் குளிர்ந்த நீர் நிறப்பி சில மணி நேரம் ரேபிரிஜிறேட். ஓவெர்நைட் ரேபிரிஜிறேட் செய்தேன். இது உருளையை க்ரிஸ்ப் ஆகக்கும். வடிக்க. காட்டன் டவல் மேல் போட்டு நீரை நீக்குக. நன்ராக பேபர் டவலில் ஒத்தி ஒத்தி நீரை நீக்கினேன்
- 3
நீர் போன துண்டுகளை முதலில் எண்ணையில் 300F (130 C) பொறிக்க. இது எண்ணையில் செய்யும் பிளஞ்சிங். Frying thermometer இருந்தால் நல்லது. 2 அல்லது 3 பெட்ச் ஆக பொறிக்க. ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க வலை கரண்டியால் கிளறவும். எண்ணையில் குமிழ்கள் வரும், 80% பொரிக்கவும், 3-5 நிமிடங்கள். நிறம் மாறக்கூடாது, எண்ணை வடித்து ஒரு டீரே மேல் பேப்பர் டவல் மேல் போடுக, ஒரு லேயர் ஆக போடுக, ஆறினபின் ரேபிரிஜெரேடரில் 3-4 மணி நேரமாவது வைக்க. எடுக்க. வெளியே கிரிஸ்ப், உள்ளே வ்ளவ்வி ஆக இருக்கும்.
- 4
2 வது பொறித்தல் (375-380F, 180C) கடாயில் எண்ணை. முழுக்க பொறிக்க. 2 அல்லது 3 பெட்ச் ஆக பொறிக்க. ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க வலை கரண்டியால் கிளறவும் கோல்டன் பிரவுன் ஆக வேண்டும். எண்ணை வடித்து ஒரு டீரே மேல் பேப்பர் டவல் மேல் போடுக, ஒரு லேயர் ஆக போடுக,
எண்ணை நீங்கின பின் சூடான போலில் போட்டு மிளகாய் பொடி, அல்லது மிளகு பொடி, உப்பு சேர்த்து குலுக்குக, - 5
ருசியான கிரிஸ்ப் பிரெஞ்ச் ஃப்ரைஸ் தயார். ஆப்பிள் பை, மசாலா டீ கூட சாப்பிட்டோம்,கேச்சப், சில்லி சாஸ் கூட பரிமாறுக
Similar Recipes
More Recipes

கமெண்ட் (4)