மசூர் தால் தட்கா(masoor dal tadka recipe in tamil)
மசூர் தால் தட்கா(masoor dal tadka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் 2 தேக்கரண்டி நெய் சேர்க்கவும் சூடானதும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். கூடவே பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் மல்லித் தூள் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 2
தக்காளி நன்றாக வதங்கி நெய் பிரிந்து வந்த பின், அங்கு மணி நேரம் ஊற வைத்த மைசூர் பருப்பை தண்ணீர் வடித்து குக்கரில் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும் இதோடு பாதி அளவு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள தேவையான அளவு உப்பு சேர்த்து பருப்பு வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வேகவிடவும்.
- 3
ஒரு தாளிப்பு கரண்டியில் மீதமுள்ள நெய் சேர்த்து சூடானதும் கால் தேக்கரண்டி சீரகம் நீளமாக வெளியே ஒரு பச்சை மிளகாய் 2 கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் அடுப்பை அணைத்து அந்த சூட்டில் மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்க்கவும் நன்றாக நிறம் வந்தவுடன் அந்த தாளிப்பை பருப்பில் சேர்த்து கிளறவும்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்