மசூர் தால் தட்கா(masoor dal tadka recipe in tamil)

Dhivya
Dhivya @DhivyaA

மசூர் தால் தட்கா(masoor dal tadka recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் மைசூர் பருப்பு
  2. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  3. 1 தக்காளி
  4. 3மேசைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
  5. 4மேசைக்கரண்டி நெய்
  6. 10 கறிவேப்பிலை
  7. 3/4 தேக்கரண்டி சீரகம்
  8. 1/2 சிட்டிகை பெருங்காயத் தூள்
  9. 1 பச்சை மிளகாய்
  10. 1/2 இன்ச் இஞ்சி
  11. 1 தேக்கரண்டி மல்லித் தூள்
  12. 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  13. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குக்கரில் 2 தேக்கரண்டி நெய் சேர்க்கவும் சூடானதும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். கூடவே பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் மல்லித் தூள் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    தக்காளி நன்றாக வதங்கி நெய் பிரிந்து வந்த பின், அங்கு மணி நேரம் ஊற வைத்த மைசூர் பருப்பை தண்ணீர் வடித்து குக்கரில் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும் இதோடு பாதி அளவு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள தேவையான அளவு உப்பு சேர்த்து பருப்பு வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வேகவிடவும்.

  3. 3

    ஒரு தாளிப்பு கரண்டியில் மீதமுள்ள நெய் சேர்த்து சூடானதும் கால் தேக்கரண்டி சீரகம் நீளமாக வெளியே ஒரு பச்சை மிளகாய் 2 கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் அடுப்பை அணைத்து அந்த சூட்டில் மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்க்கவும் நன்றாக நிறம் வந்தவுடன் அந்த தாளிப்பை பருப்பில் சேர்த்து கிளறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhivya
Dhivya @DhivyaA
அன்று

Similar Recipes