பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)

பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.
#vk

சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை நன்கு கழுவி குக்கரில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 2
பலாக்கொட்டை,வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கி தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பலாக்கொட்டை,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 4
பின்னர் அத்துடன்,சாம்பார் வெங்காயம், உருளைக் கிழங்கை தோல் நீக்கி நறுக்கி சேர்க்கவும். நறுக்கிய கத்தரி,தக்காளி சேர்க்கவும்.
- 5
பின்பு சாம்பார் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- 6
அத்துடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசல்,வேக வைத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 7
கடைசியாக தாளிப்பு கரண்டியை வைத்து நெய் சேர்த்து சூடானதும் கடுகு,வற்றல்,கறிவேப்பிலை,பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.
- 8
பின்னர் எடுத்து ஒரு பௌலில் சேர்த்து நறுக்கிய மல்லி இலை தூவினால் சுவையான பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் சுவைக்கத்தயார்.
- 9
இந்த சாம்பார் இட்லி, தோசை,சாதம் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (5)