ஊறுகாய் பொடி தோசை(pickle podi dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் கருப்பு எள்ளு, ஓமம் லேசாக வறுக்க வேண்டும். அடுத்தது கடுகு வறுக்க வேண்டும். அடுத்தது உப்பு சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்தது சீரகம், சோம்பு,வெந்தயம், மிளகு வறுத்து வைக்கவும் எல்லாம் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பிறகு இதை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பவுடர் செய்யவும்.
- 2
அடுத்தது அரைச்ச பவுடர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மாங்காய் தூள், உப்பு, கருப்பு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம். சுவையான ஊறுகாய் மாங்காய் பொடி தயார்.
- 3
அடுத்து மாங்காய் பொடி தோசை செய்ய தோசைச்சட்டியில் மாவை ஊற்றி தோசை பாதி வெந்தவுடன் அதின்மேல் மாங்காய் பொடி தூவி விடவும் அதை சுற்றியும் எண்ணெய் ஊற்றி சூடவும். சூடான மற்றும் மொறுமொறுப்பான ஊறுகாய் பொடி தோசை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்