கோவில் புளியோதரை(kovil puliyotharai recipe in tamil)

#Fc நானும் லட்சுமி சேர்ந்து செய்த புளியோதரை இது. மிகவும் சுவையாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது இதை செய்து கொண்டு போகலாம் இரண்டு நாட்கள் வரை கெட்டுப் போகாது.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் வத்தல், குழம்பு கடலை பருப்பு, வெந்தயம், மல்லி விதை, கடுகு இவற்றை தனித்தனியாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சூடு ஆறிய பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
எள்ளு மற்றும் பூண்டை அதன் பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
பின்னர் ஒரு பாத்திரத்தில் கடுகு,குழம்பு கடலை பருப்பு, இரண்டு வத்தல் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்
- 4
அவர்களின் அதில் நிலக்கடலை சேர்த்து வறுக்க வேண்டும்.
- 5
ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளிக்கரைசல் கரைத்து வைத்துக்கொண்டு அதனை வடிகட்டி சேர்க்க வேண்டும். பின்னர் கலவையை நன்குகொதிக்க வைக்க வேண்டும்.
- 6
அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை இரண்டு டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சுண்ட வைத்துக் கொள்ள வேண்டும்.
- 7
பின்னர் வடித்த சாதத்தில் புளி கரைசல் கிரேவியை ஊற்றி அதன் பின் மீதமுள்ள மசாலா கலவையை சேர்த்து நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- 8
இப்பொழுது மணக்கும் சுவையான கோவில் புளியோதரை ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்