விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)

#RD
விரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று.
விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)
#RD
விரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று.
சமையல் குறிப்புகள்
- 1
சாதத்தை 1 ஸ்பூன் ந.எண்ணெய் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும்.புளியை கெட்டியாக கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மீடியத்தில் வைத்து வெறும் கடாயில் தனியா, கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, எள்,மிளகாய், வெந்தயம்,மிளகு, ஆகியவற்றை கருகாமல் நன்கு வறுத்து தட்டில் ஆற விடவும்.
- 3
ஆறினதும் மிக்ஸி ஜாரில் போட்டு சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
- 4
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், 5 டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய் காய்ந்ததும்,வேர்க்கடலையை போட்டு வறுத்ததும், க.பருப்பு, உ.பருப்பு போடவும்.
- 5
பருப்புகள் சிவந்ததும்,வெந்தயம் போட்டு சிவந்ததும்,கீறின ப.மிளகாய், சி.மிளகாய், உப்பு போடவும்.
- 6
பிறகு ம.தூள், கருவேப்பிலை பொரிந்ததும்,புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
- 7
புளி வாசனை போக கொதித்ததும், வெல்லத்தை நன்கு பொடித்து போடவும்.
- 8
பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து வறுத்த பொடி, 3டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் போட்டு, எண்ணெய் மேலே வர கொதிக்க விடவும்.
- 9
கொதித்து கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விட்டு, வடித்த சாதத்தை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
- 10
சாதத்தை ஒரு பௌலுக்கு மாற்றவும்.மேலே காய்ச்சாத ந.எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு கிளறவும்.இப்போது, சுவையான,*கோவில் புளியோதரை* தயார்.கோவில்களில் இதே முறையில்தான் புளியோதரை செய்வார்கள்.நான் இதை வெண் புழுங்கலரிசியில் செய்துள்ளேன். செய்து அசத்தவும்.
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட் (4)