*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)

சகோதரி முனீஸ்வரி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருந்தது. நன்றி சகோதரி.@munis_gmvs, ரெசிபி,
*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)
சகோதரி முனீஸ்வரி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருந்தது. நன்றி சகோதரி.@munis_gmvs, ரெசிபி,
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மீடியத்தில் வைத்து, குக்கரில், பாசிப்பருப்பை சுத்தம் செய்து, தேவையான தண்ணீர், உப்பு போட்டு, மூடி போட்டு மூடவும்.
- 3
மூடினதும், குழைய வேக விடவும்.
- 4
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளிக்கவும்.
- 5
அடுத்து, ப.மிளகாய்,கருவேப்பிலையை தாளித்து,வெங்காயம், ம.தூள், உப்பு போட்டு வதக்கவும்.
- 6
அடுத்து, தக்காளி,சாம்பார் பொடி, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- 7
பொடி வாசனை போனதும், வெந்த பருப்பை போடவும்.
- 8
ஒன்று சேர வெந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு நறுக்கின கொத்தமல்லி தழையை போடவும்.
- 9
பிறகு அடுப்பை நிறுத்தி விட்டு, பௌலுக்கு மாற்றவும்.மேலே கொத்தமல்லி தழை யை போட்டு கிளறவும்.இப்போது, சுவையான, சுலபமான,*பாசிப்பருப்பு, சாம்பார்* தயார்.இது இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும்.செய்து அசத்தவும்.
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட் (2)