தயிர் பூரி(tayir puri recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி மற்றும் துருவிய கேரட்டை கலந்து வைத்துக் கொள்ளவும்
- 2
வேறு ஒரு பாத்திரத்தில் தயிருடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பூரி செய்வதற்கு மைதா மாவு ரவை உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும் அதை ஒரு மணி நேரம் ஊற விட்டு சப்பாத்தியை போல் தேய்த்து அதை வட்ட வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்
- 4
உருளைக்கிழங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசையை விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் இப்போது அதை தோல் நீக்கி அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் சாட் மசாலா பெரிய வெங்காயம் சேர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும்
- 5
தயார் செய்து வைத்துள்ள வீடியோ ஓட்டை போட்டு அதனை உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மேலே தயிர் ஊற்றி பிறகு அதன் மேல் கேரட் கலவையை தூவி மேலே ஓமப்பொடியை போடவும்
- 6
இப்பொழுது தயிர் பொரி தயார்
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்