ஆம்பூர் தம் பிரியாணி(ambur dum biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் 200 மில்லி எண்ணெய் போடவும் என்னை காய்ந்தவுடன்
- 2
பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும் பின்பு வெங்காயத்தை நீல நீளமாக வெட்டிக் கொள்ளவும்
- 3
பொன் நிறம் வரும் வரை வெங்காயத்தை கலரவும் பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்
- 4
வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட்டும் ஒன்றாக சேரும் வரை கிளறவும் பின்பு மிளகாய் தூள் போட்டவுடன் கறியை போடவும்
- 5
கறி போட்டவுடன் உப்பை சேர்க்கவும் பின்பு நன்றாக கிளறிய பிறகு தக்காளியை போடவும்
- 6
தக்காளி கறியுடன் சேர்ந்த பிறகு கொத்தமல்லி பொதினா எலுமிச்சை தயிர் பச்சை மிளகாய் இவை அனைத்தும் போட்டு கிளறவும்
- 7
உப்பு காரம் கம்மியாக இருந்தால் சேர்த்துக் கொள்ளவும் பின்பு தண்ணீர் ஒரு டம்ளர் விட்டு பத்து நிமிடம் குக்கரில் வேக வைக்கவும்
- 8
பின்பு கனமான பாத்திரத்தில் நாம் வேகவைத்த மசாலாவை போடவும்
- 9
அத்துடன் நாம் இன்னும் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்
- 10
கொதி வந்தவுடன் அரிசி போடவும் பின்பு அத்துடன் புதினாவும் கொஞ்சம் உப்பும் சேர்க்கவும்
- 11
தண்ணீர் குறைந்த உடன் நாம் அடுப்பை சிம் செய்து கொள்ளவும் பிறகு நாம் தம் தம் விட வேண்டும்
- 12
நன்றாக தம் ஆனவுடன் இருவது நிமிடம் தமாக வேண்டும்
- 13
அரிசியுடன் அரிசி வேக வில்லை என்றால் அரை டம்ளர் தண்ணீர் சூடு செய்து சேர்க்கவும்
- 14
பிறகு தம் பிரியாணி ரெடி நீ இதை போல் ட்ரை பண்ணுங்கள் நிச்சயமாக பிரியாணி நன்றாக இருக்கும் நன்றி
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்