பனம்கலக்கண்டு லட்டு(panangalkandu laddu recipe in tamil)

#ChoosetoCook - My favorite Receipe.., புரதம் நிறைந்த பொட்டு கடலையுடன் பனம் கலக்கண்டு சேர்த்து செய்த ஹெல்தியான சுவையான எனக்கு பிடித்த லட்டு... 😋
பனம்கலக்கண்டு லட்டு(panangalkandu laddu recipe in tamil)
#ChoosetoCook - My favorite Receipe.., புரதம் நிறைந்த பொட்டு கடலையுடன் பனம் கலக்கண்டு சேர்த்து செய்த ஹெல்தியான சுவையான எனக்கு பிடித்த லட்டு... 😋
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பொ ட்டுக்கடலையுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நைஸ் பவுடராக பொடித்து சலித்துக்கவும்.(பொட்டு கடலையை உடைத்த கடலை, பொரி கடலை என்றும் சொல்வார்கள்)
- 2
அதேபோல் பனம்கலக்கண்டை ஒன்னிரண்டாக உடைத்த பிறகு மிக்ஸியில் நன்கு நைஸ் பவுடரா பொடித்து சலித்துஎடுத்து வைத்துக்கவும்.
- 3
ஒரு பவுலில் பொட்டு கடலை மாவு, பனம்கல்க்காண்டு பவுடர் சேர்த்து நன்கு கலந்துக்கவும். ஸ்டவ்வில் வானலி வைத்து நெய் ஊற்றி முந்திரியை வறுத்து லட்டு மாவுடன் நன்கு கலந்து விடவும்
- 4
அதே வாணலியை ஸ்டவ்வில் வைத்து மிதமான சூட்டில் நெய் ஊற்றி நன்கு சூடானதும் அதை கலந்து வைத்திருக்கும் மாவில் விட்டு எல்லாம் ஓன்று சேர கரண்டி வைத்து கலந்து விடவும். நெய் தேவைக்கேத்தபோல் சேர்த்துக்கவும்.
- 5
பிறகு சூடாக இருக்கும்பொழுதே சின்ன லட்டு வாக உருண்டை பிடித்துவைத்துக்கவும். அருமையான பனம்கலக்கண்டு மா லட்டு தயார்
- 6
மிக மிக சுவையான ஸ்வீட்.. இதில் வெள்ளை சர்க்கரைக்கு பதில் பனம்கலக்கண்டு சேர்தது செய்திருப்பதினால் மிக ஹெல்தியான சுவைமிக்க லட்டு...
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட்