மொறு மொறு வெண்டைக்காய்(crispy ladys finger recipe in tamil)

Gowri's kitchen @gowri_8292
மொறு மொறு வெண்டைக்காய்(crispy ladys finger recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து அதை துடைத்து நன்கு ஈரம் இல்லாமல் உலர்த்திக் கொள்ளவும்
- 2
வெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து உள்ளே உள்ள விதைகளை எடுத்து விடவும். பிறகு இதனை நீல வாக்கில் மெல்லிசாக வெட்டிக் கொள்ளவும்
- 3
வெட்டிய வெண்டைக்காயில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சாட் மசாலா மற்றும் மல்லி தூள் சேர்த்து பிரட்டவும்
- 4
மசாலா சேர்த்த வெண்டைக்காயில் அரிசி மாவு மற்றும் சோள மாவு சேர்த்து பிரட்டவும்
- 5
மாவு சேர்த்த பிறகு சிறிது எலுமிச்சை பழம் ஜூஸ் சேர்த்து விரட்டவும்
- 6
தயாராக வைத்துள்ள வெண்டைக்காயை காய்ந்த எண்ணெயில் மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால் அருமையான சுவையான மொறு மொறு வெண்டைக்காய் ரெடி 😋😋😋
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16581411











கமெண்ட்