அதிரசம்(athirasam recipe in tamil)

வருடா வருடம் கேதார கௌரி அம்மன் விரதத்தின் போது இந்த அதிரசம் செய்து அம்மனுக்கு படைப்போம்.
அதிரசம்(athirasam recipe in tamil)
வருடா வருடம் கேதார கௌரி அம்மன் விரதத்தின் போது இந்த அதிரசம் செய்து அம்மனுக்கு படைப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
அரிசியை தண்ணீர் போக வடித்து ஒரு துணியில் நிழலில் ஈரம் போகும் வரை காய விடவும். கையில் அரிசியை பிடித்தால் கையில் ஈரம் ஒட்டாமல் இருக்க வேண்டும். அரிசியை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனை பாகு காய்ச்சவும். பாகு தண்ணீரில் சேர்த்தால் உருண்டு வர வேண்டும் அந்தப் பதத்திற்கு காட்சி கொள்ளவும்.
- 4
அரைத்து வைத்த மாவை கொஞ்சம் பெரிய கண் உள்ள சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
- 5
காய்ச்சிய வெல்ல பாகில் சலித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து அதனுடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்கு கலந்து பதம் வரும் வரை கிளறவும்.
- 6
பதம் வந்தவுடன் இந்த மாவினை நன்கு ஆரிய பிறகு ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் சேர்த்து காத்து போகாதவாறு நன்கு மூடி வைக்கவும். ஒரு நாள் முழுவதுமாக ஊற வைக்கவும்.
- 7
மறுநாள் இந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கையில் வட்டமாக தட்டி காய்ந்த எண்ணெயில் மிதமான சூட்டில் இருபுறமும் சிவந்து வரும் அளவு வேக விட்டு எடுக்கவும். எந்த கச்சாயத்தை அமுக்கியில் வைத்து அமுக்கி அதிகமாக உள்ள எண்ணெய்யை வெளியேற்றினால் சுவையான அருமையான அதிரசம் தயார் 😋😋😋
- 8
இது நம் பாரம்பரிய முறையில் தயாரிக்கும் சுவையான அதிரசம் ஆகும்.
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட் (6)