முட்டை 65(egg 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 6 முட்டையை உடைத்து ஊற்றவும்
- 2
பிறகு அதில் மஞ்சள் தூள்,மிளகு தூள், சீரகத்தூள், உப்பு, சில்லி பிளக்ஸ் சேர்த்து கலக்கவும்
- 3
பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதிக்கும் நேரத்தில் ஒரு பாத்திரத்தில் பட்டர் தடவி அதில் கலக்கிய முட்டையை ஊற்றவும்
- 4
பிறகு கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் மூடி போட்டு 15 நிமிடம் வேக விடவும்
- 5
வேகவைத்த முட்டையை வெளியே எடுத்து ஆற வைக்கவும் பிறகு ஆறியதும் தேவையான அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும்
- 6
பிறகு ஒரு பாத்திரத்தில் சோள மாவு,அரிசி மாவு,காஷ்மீர் மிளகாய்த்தூள், சிக்கன்65 மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கலர் பவுடர், ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும் பிறகு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 7
பிறகு அதில் நறுக்கிய முட்டை சேர்த்து கலக்கவும்
- 8
பிறகு வானிலேயே எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கலக்கிய முட்டையை சேர்த்து பொரித்து எடுக்கவும்
- 9
இப்பொழுது சுவையான முட்டை 65 தயார்
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட்