ராகி மால்ட் கேக்(ragi malt cake recipe in tamil)

ராகி மால்ட் கேக்(ragi malt cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மால்ட் உடன் மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து ஜலித்து கொள்ளவும் ராகி மால்ட் மணமே மிகவும் நன்றாக இருக்கும்
- 2
ஒரு மிக்ஸியில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் கேக் ஜெல் வெனிலா எசென்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைக்கவும்
- 3
பின் இதனுடன் ஆயில் சேர்த்து நன்கு ஸ்மூத்தாக அரைத்து எடுக்கவும்
- 4
பின் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக தூவி நன்கு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
- 5
மிகவும் கெட்டியாக இருந்தால் மட்டுமே 2 ஸ்பூன் அளவில் பால் சேர்க்கவும் இட்லி மாவு பதத்தில் இருந்தால் போதும் கட்டியில்லாமல் ஸ்மூத்தாக கலந்து கொள்ளவும்
- 6
பின் பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் மாவை ஊற்றவும்
- 7
பின் ஓவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடாக்கவும் பின் சூடான ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 35_40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 8
வெந்ததும் ஒரு டூத் பிக் வைத்து நடுவில் குத்தி பார்த்து வெந்ததும் எடுக்கவும்
- 9
5 நிமிடங்கள் கழித்து ட்ரேயில் இருந்து கவிழ்த்து பட்டர் பேப்பர் ஐ மெதுவாக நீக்கவும்
- 10
பின் ஒரு மணி நேரம் வரை நன்கு ஆறவிட்டு கட்செய்யவும்
- 11
சுவையான ஆரோக்கியமான மணமான ராகி மால்ட் கேக் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes




































கமெண்ட்